/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது
/
கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது
ADDED : ஏப் 10, 2025 04:19 AM

திருக்கனுார்: திருக்கனுார் புறவழிச் சாலை ஏரிக்கரை அருகே வாலிபர் ஒருவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், விநாயகம்பட்டைச் சேர்ந்த சண்முகம் மகன் விபூஷ்ணன் 23; என்பதும், அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்துதும் தெரிந்தது.
இதையடுத்து, விபூஷ்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

