ADDED : பிப் 16, 2026 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வைத்திக்குப்பம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா, குட்கா விற்றுக் கொண்டிருந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த சார்லஸ், 23, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

