ADDED : நவ 18, 2026 07:09 PM

அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,17) நள்ளிரவு ரோந்து சென்றனர். விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை, பரிக்கல்பட்டு பகுதியில், கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு சென்று, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், மேல்பரிக்கல்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சஞ்சய் 22; என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா, மொபைல் போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
