/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது
/
கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது
ADDED : ஜன 31, 2025 12:31 AM
புதுச்சேரி; வேல்ராம்பட்டு, மறைமலை நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரசாந்த், 26. இவர் தவளக்குப்பம் பகுதியில் புதுச்சேரி - கடலுார் சாலையோரத்தில் தள்ளுவண்டியில், 'சிக்கன் 65' கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 22,ம் தேதி இரவு 10:00 மணிக்கு, வியாபாரத்தை முடித்து விட்டு பொருட்களை, எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அங்கு பைக்கில் வந்த, 3 பேர் அவரிடம் 'சிக்கன் 65'கேட்டனர். அதற்கு அவர் தீர்ந்து விட்டதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த பிரசாந்த், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விவகாரத்தில் தேங்காய் திட்டு, திலகர் நகரை சேர்ந்த அஜய், 21, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக இருக்கும், முகிலனை போலீசார் தேடி வருகின்றனர்.

