ADDED : பிப் 26, 2024 05:06 AM

காரைக்கால்: காரைக்காலில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் விலை உயர்ந்த பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், விழிதியூர் சாலையில் நிரவி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த வாலிபரை பிடித்து சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர்.
அவர், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பிரான்சிஸ், 23, என்பதும், இவர், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த இரண்டு விலை உயர்ந்த பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது.
இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, பிரான்சிஸ்சை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த பதிவு எண் இல்லாத 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர் . அவரை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
