ADDED : மார் 11, 2024 04:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, :பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம், பெரியமுதலியார்சாவடி, கந்தப்பன் நகரைச் சேர்ந்தவர் ஹரிகரன், 25. இவர் நேற்று தனது பைக்கில் புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள சர்ச்சுக்கு வந்தார். பைக்கை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று மீண்டும் திரும்பி வந்தார்.
அப்போது அவரது பைக்கை விழுப்புரத்தை சேர்ந்த மணி, 19, என்பவர் பூட்டை உடைத்து திருடி எடுத்து செல்ல முயன்றார். அவரை மடக்கி பிடித்து ஒதியன்சாலை போலீசில் ஹரிகரன் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மணியை கைது செய்தனர்.
