ADDED : ஆக 31, 2025 05:54 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர். வீட்டு முன்பு நிறுத்திருந்த இவரது பைக் கடந்த 19ம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து, புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவலின்படி, ஆரோவில் அடுத்த இடையாஞ்சாவடி பகுதியை சேர்ந்த நரேஷ், 19; என்பது தெரியவந்தது. அவரது வீடு அருகே நின்ற போது, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தவளக்குப்பம் மற்றும் ஆரோவில் பகுதியில் பைக்குகள் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

