தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காப்பர் காயில் திருட்டு வாலிபர் கைது

 காப்பர் காயில் திருட்டு வாலிபர் கைது

 காப்பர் காயில் திருட்டு வாலிபர் கைது


ADDED : ஜூலை 01, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் வீட்டில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் திருடிய தமிழகவாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முத்தியால்பேட்டை அங்களாம்மன் நகரைச் சேர்ந்தவர் மன்னாதன்,45. அரசுதொடக்கப் பள்ளி ஆசிரியர். இவர் கருவடிக்குப்பம் சண்முகா நகர் பகுதியில் புதியதாக வீடு கட்டிகடந்த மாதம் 4ம் தேதி புதுமனை புகுவிழா நடத்தினார்.

ஆனால் சில கட்டுமான பணிகள் தாமதமானதால், குடிபுகவில்லை. இந்நிலையில், கடந்த 26ம் தேதி ஒயரிங் வேலைக்காக கார் பார்க்கிங் பகுதியில் உள்ள மெயின் பாக்சில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் காயிலை வைத்துவிட்டு சென்றார்.பின்நேற்று முன்தினம் காலை மன்னாதன் வந்து பார்த்த போது, காப்பர் ஒயர்காயிலை காணவில்லை. வீட்டில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது, வாலிபர் ஒருவர் ஒயர்களை மூட்டையாக கட்டி திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து மன்னாதன்லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., காட்சிகளை வைத்துவிசாரித்தனர. விசாரணையில் காப்பர் ஒயரை திருடியது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார், 29, என தெரியவந்தது.தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us