ADDED : மார் 28, 2025 05:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உழவர்கரை சமுதாய நலக்கூடம் அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் திரிந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், கோரிமேட்டைச் சேர்ந்த விமல்ராஜ், 27; என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
