/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது
/
நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது
ADDED : ஜன 29, 2025 05:13 AM

புதுச்சேரி : புதுச்சேரி கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே 19ம் தேதி, நாட்டு வெடிகுண்டு வெடித்தது. பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, 6 பேர் கொண்ட கும்பல், வாஞ்சிநாதன் வீதி வழியாக பைக்கில் செல்வதும், அப்போது கையில் வைத்திருந்து நாட்டு வெடிகுண்டை சாலையில் வீசி வெடிக்க செய்திருப்பது தெரியவந்தது. நாட்டு வெடிகுண்டு வீசியது, கண்டாக்டர்தோட்டம், லோகபிரகாஷ், 19; அவரது கூட்டாளிகள் ஹேமத், 18; குபேர் நகர், விஜயராகவன், 19; மற்றும் 17 வயது சிறார்கள் மூவர் ஈடுப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதில், ஹேமந்த், விஜயராகவன் மற்றம் 3 சிறார்களை போலீசார் கைது செய்தனர். லோகபிரகாஷ்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த டிக்கர் மணிக்கும் முன் விரோதம் இருந்தது. டிக்கர் மணியை கொலை செய்ய லோகபிரகாஷ் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டு வந்து சாலையில் வீசி சென்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் தப்பியோடிய லோகபிரகாஷ் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் கோவிந்தசாலையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது, பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் லோகபிரகாைஷ கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

