ADDED : செப் 17, 2026 07:53 PM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் நாணமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 27; டிரைவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு, 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்தார். கர்ப்பமான சிறுமியை, புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவனையில் பரிசோதனையில் சேர்த்தார். ஆதார் கார்டு மூலம் சிறுமிக்கு வயது 17 என்பது தெரியவந்ததால், மருத்துமனை நிர்வாகம் தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, போலீசார் மணிகண்டன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த மணிகண்டன், மன உளச்சலில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
