UPDATED : அக் 17, 2026 01:05 AM
ADDED : அக் 17, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்னை, காசிமேட்டை சேர்ந்தவர் தியாகு; த.வெ.க., வட்ட இணை செயலாளர். இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த ஆக., மாதம் புதுச்சேரி அழைத்து வந்து, ஒரு விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நலக் குழுவினர் சிறுமியிடம் விசாரித்தனர். பின், அவர்கள் புகாரின் பேரில், ராயபுரம் மகளிர் போலீசார் தியாகு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் புதுச்சேரியில் நடந்ததால், வழக்கு புதுச்சேரி போலீசாருக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி போலீசார் தியாகுவை கைது செய்தனர்.
