தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதை டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

போதை டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

போதை டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்


ADDED : அக் 17, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் போக்குவரத்து போலீசார் அபாரதம் விதித்தனர்.

மதகடிப்பட்டில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை இந்திரா சதுக்கம், நுாறடிச்சாலை வழியாக மரப்பாலம் நோக்கி சென்றது. பஸ்சை நோணாங்குப்பம் டிரைவர் ராஜவேலு, 54, ஓட்டிச் சென்றார்.

பஸ் நுாறடிச்சாலை மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, தாறுமாறாக சென்றது. அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரப்பாலம் அருகே சென்ற பஸ்சை போக்குவரத்து போலீசார் நிறுத்தி பஸ் டிரைவர் ராஜவேலுவை சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் பஸ்சை ஒட்டியது தெரியவந்தது.

இதையடுத்து மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் ராஜவேலுக்கு கிழக்கு போக்குவரத்து போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us