/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருட்டு வழக்கில் வாலிபர் கைது இரு பைக்குகள் பறிமுதல்
/
திருட்டு வழக்கில் வாலிபர் கைது இரு பைக்குகள் பறிமுதல்
திருட்டு வழக்கில் வாலிபர் கைது இரு பைக்குகள் பறிமுதல்
திருட்டு வழக்கில் வாலிபர் கைது இரு பைக்குகள் பறிமுதல்
ADDED : நவ 23, 2024 06:37 AM
புதுச்சேரி : பைக் திருடிய வாலிபரை கைது செய்து, இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். கடலுார் சாலை கோர்ட் அருகே கடந்த, ஜூலை மாதம், நிறுத்திருந்த பைக் காணாமல் போனது. அதே போல, முத்தியால்பேட்டையை சேர்ந்த உதயானந்தம், இவர், கோர்ட் வெளியே நிறுத்திருந்த அவரது பைக்கும் காணாமல் போனது.
இது குறித்து, இருவரும் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று கோர்ட் வெளியே, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் லாஸ்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், 33; எனவு இரு பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.