/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
ADDED : அக் 07, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முன் விரோதத்தில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வில்லியனுார் கரசூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் கிருபா,24, இவர் தனக்கு சொந்தமான லாரியினை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் எதிரில் நிறுத்தி விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், 27, சிவதாஸ், 25, குமரன், 25, ஆகியோர் கிருபாவை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கிருபா கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.