/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசின் வேளாண் போலி லிங்க் மூலம் வாலிபரிடம் ரூ.5.81 லட்சம் மோசடி
/
மத்திய அரசின் வேளாண் போலி லிங்க் மூலம் வாலிபரிடம் ரூ.5.81 லட்சம் மோசடி
மத்திய அரசின் வேளாண் போலி லிங்க் மூலம் வாலிபரிடம் ரூ.5.81 லட்சம் மோசடி
மத்திய அரசின் வேளாண் போலி லிங்க் மூலம் வாலிபரிடம் ரூ.5.81 லட்சம் மோசடி
ADDED : ஏப் 16, 2025 10:25 PM
புதுச்சேரி: பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்ட போலி லிங்க் அனுப்பி, நெல்லித்தோப்பு வாலிபரிடம் ரூ.5.81 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.
இவரது மொபைல் எண்ணிற்கு, வாட்ஸ் ஆப் மூலம் பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் தொடர்பான லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை உண்மை என நம்பி, ராமச்சந்திரன் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவிட்டு உள்ளார்.அதன்பின், சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்து, ஏமாற்றியுள்ளனர்.
உருளையன்பேட்டையை சேர்ந்தவர் குமரன்.
இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.இதைநம்பி, குமரன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். பின்னர், அதில் கிடைத்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
காரைக்காலை சேர்ந்த சந்தியா 60 ஆயிரம், முதலியார்பேட்டை சேர்ந்த பிரசாந்த் 31 ஆயிரத்து 575, திருபுவனையை சேர்ந்த சக்திவேல் 27 ஆயிரத்து 670, கதிர்காமத்தை சேர்ந்த உஷாராணி 31 ஆயிரம் என 6 பேர் மோசடி கும்பலிடம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 245 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.