தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை


ADDED : செப் 28, 2025 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, நவசக்தி நகரைச் சேர்ந்தவர் மாலதி. இவரது கணவர் பன்னீர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தனது மகன்கள் கோகுல கண்ணன், 26; கண்ணப்பன் ஆகியோரிடம் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவரது மகன் கோகுல கண்ணன், எம். எஸ்சி., இயற்பியல் படித்து விட்டு, பல்கலைக் கழகத்தில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே, ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால், கடந்த ஓராண்டாக வேலைக்கு செல்லாமல், எனது உள் மனது என்னை சாக சொல்கிறது என, கூறி வந்தார்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி கோகுல கண்ணன், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, உறவினர்கள் கோகுல கண்ணனை மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கோகுல கண்ணன் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us