/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
/
காஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
காஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
காஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 14, 2025 04:24 AM

வில்லியனுார்:புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில், காஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வில்லியனுார் ராஜிவ் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய இளைஞர் காங்., செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மத்திய அரசை கண்டித்து உரையாற்றினர்.
காங்., மாநில நிர்வாகிகள் தேவதாஸ், பாலன், திருமுருகன், தனுசு, மருதுபாண்டியன், அசன், மோகன்தாஸ், ரகுபதி, செந்தில், பழனிராஜா, தொகுதி நிர்வாகிகள் ராஜகுமார், விநாயகம், வீரமுத்து, சத்தியமூர்த்தி, தியாகராஜன், ரவிச்சந்திரன், ராஜ்குமார், வீரப்பன், நிர்வாகிகள் கோவலன், சசி, பிரதீப், ஜீவரத்தினம், ரஞ்சித், அஜித், தமிழரசன், மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

