/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
/
தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : மே 28, 2025 07:19 AM

பாகூர் : தடுப்புக் கட்டையில் பைக் மோதி வாலிபர் இறந்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பாலாஜி 24; கடலுாரில் தங்கி, புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார்.
வழக்கம் போல் நேற்று காலை 9:30 மணியளவில் தனது பைக்கில் புதுச்சேரி சென்று கொண்டிருந்தார்.
தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு கட்டையில் மோதி சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலாஜி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெல்மெட் இருந்தும்
பயன்படுத்தாததால் சாவு
விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த பாலாஜி, தன்னுடன் ஹல்மெட்டை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அதனை தலையில் அணிந்து செல்லாமல், பைக்கில் மாட்டி சென்றுள்ளார். அவர் ஹெல்மெட்டை அணிந்து சென்று இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்.