/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்காலில் விழுந்த வாலிபர் சாவு
/
வாய்காலில் விழுந்த வாலிபர் சாவு
ADDED : அக் 31, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாய்காலில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
வில்லியனுார், மூலக்கடை பெரம்பை ரோட்டைச் சேர்ந்தவர் மதுசூதன், 27; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அதற்காக ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் செல்லும் ஏரி பாசனம் வாய்காலில் விழுந்து பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

