UPDATED : அக் 07, 2026 01:41 AM
ADDED : அக் 07, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
முத்திரையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன், 32; நகைக் கடை ஊழியர். இவர் நேற்று காலை 8:30 மணியளவில் துாங்கி எழுந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
