UPDATED : அக் 07, 2026 01:41 AM
ADDED : அக் 07, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வெந்நீரில் விழுந்து காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 39; வலிப்பு நோய் உள்ள இவர், சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 30ம் தேதி காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது தீடிரென வலிப்பு ஏற்பட்டு அருகில் இருந்து வெந்நீரில் விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர் .
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
