ADDED : ஏப் 09, 2025 04:50 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : சாமிபிள்ளை தோட்டம் வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் ராமராஜன், 35, இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். மனைவி மற்றும் மகள் ஆந்திராவில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர் மட்டும், தனியாக வசித்து வந்தார். வேலைக்கு சென்று, மது குடித்து விட்டு, சாப்பிடாமல் படுத்து கொள்வார்.
நேற்று முன்தினம் அதிகளவில் மது குடித்து விட்டு, வீட்டில் படுத்திருந்தார். இந்நிலையில், அருகில் குடியிருந்தவர்கள் நேற்று பார்க்கும் போது, அவர் மூச்சு பேச்சின்றி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
