/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை
/
வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை
ADDED : ஜூலை 12, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திப்புராயபேட், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ், 34; தனியார் சாப்ட்வேர் கம்பெனி டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்.
இவர் நேற்று முன்தினம் பாரதி வீதியில் நின்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த 3 பேர், பெண்களை கிண்டல் செய்தால் சும்மா விடமாட்டேன் என, மிரட்டினர்.
அதில், ஒருவர் வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
காயமடைந்த சுரேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அடையாளம் தெரியாத 3 பேரை தேடி வருகின்றனர்.