/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த சிறுவர்களுக்கான விருது இளைஞர் அமைதி மையம் அறிவிப்பு
/
சிறந்த சிறுவர்களுக்கான விருது இளைஞர் அமைதி மையம் அறிவிப்பு
சிறந்த சிறுவர்களுக்கான விருது இளைஞர் அமைதி மையம் அறிவிப்பு
சிறந்த சிறுவர்களுக்கான விருது இளைஞர் அமைதி மையம் அறிவிப்பு
ADDED : ஏப் 29, 2025 11:55 PM
புதுச்சேரி : இளைஞர் அமைதி மையம் சார்பில் சிறந்த சிறுவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனர் அரிமதி இளம்பரிதி அறிக்கை:
இளைஞர் அமைதி மையம் சார்பில் ஆண்டுதோறும் கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகனார் சாதனை விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விருதுகளுக்காக, ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி தென்றல், அமலோற்பவம் லுார்து அகாடமி மோனலிவிந்ரா, கயல்விருக் ஷா, நித்திஷ்வரன், நிஷாந்தினி, சங்கர வித்யாலயா வைஷ்ணவி, நிஷாந்தினி, செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி பிரித்திகாதேவி, டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி ஜோவிதா, புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளி சோைஹல் பர்வேஜ், பிரணவ்தர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள, அரிமதி தென்னகனாரின் 91வது பிறந்த நாள் விழாவில் செல்வகணபதி எம்.பி., சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

