/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்
/
மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்
ADDED : ஜன 09, 2025 05:57 AM
பாகூர்: குருவிநத்தம் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த கடலுார் வாலிபர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 30. இவர் நேற்று மாலை பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடிக்க சென்றார்.
அப்போது, அவருக்கும் கடையில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அக்கும்பல் முத்துவை கல் மற்றும் பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது.
படுகாயம் அடைந்த முத்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.