ADDED : டிச 05, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி பொற்செல்வி, 55. ஜெயபால் இறந்துவிட்டார். பொற்செல்வி மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
அதேப் பகுதியை சேர்ந்தவர் சிவா, 30, என்பவர், மது போதையில், அடிக்கடி பொற்செல்வியை அவதுாறாக பேசி வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக சென்ற பொற்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சிவாவை தேடி வருகின்றனர்.