/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கு யுடியூபர்கள் திருச்சி சூர்யா, சிக்கா, சுமியிடம் விசாரணை

ADDED : அக் 01, 2024 06:31 AM

யுடியூப்பர்கள் திருச்சி சூர்யா, சிக்கா, சுமியிடம் விசாரணை
புதுச்சேரி: சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில், யுடியூபர்கள் திருச்சி சூர்யா, சிக்கா, சுமி ஆகியோரிடம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 1 சிறுமிக்கு, மதுரையைச் சேர்ந்த யுடியூப் பிரபலமான சிக்கா, சுமி தம்பதியின் மகனான மதுரை சங்கயா வீதி, அஷ்ரப் அலி, 24; ஆபாச வீடியோ அனுப்பியதுடன், சிறுமியையும் நிர்வணமாக வீடியோவில் தோன்ற மிரட்டி உள்ளார்.
சிறுமியின் தாய் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 25ம் தேதி அஷ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அஷ்ரப் அலியின் பெற்றோர் சிக்கா, சுமி மற்றும் உறவினரான யுடியூபர் திருச்சி சூர்யா ஆகியோரும் சிறுமியை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூவரையும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, யுடியூபர்கள் சிக்கா, சுமி, திருச்சி சூர்யா ஆகிய மூவரும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆஜராகினர்.
இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் மூவரிடம் விசாரணை நடத்தினர். மூவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
இன்று 1ம் தேதி, இரண்டாவது நாளாக மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடக்கவுள்ளது.