தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மண்டல தடகள போட்டி துவக்கம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

மண்டல தடகள போட்டி துவக்கம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

மண்டல தடகள போட்டி துவக்கம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு


ADDED : நவ 04, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் வட்டம் ஒன்று மண்டல தடகளப் போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

இன்று (நவ.,4) நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தொடக்கம் முதலே மைதானத்தில் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஓட்டப்பந்தயக் கோட்டை நோக்கிப் பாய்ந்த புயல்கள், உயரத்திலும் நீளத்திலும் தங்கள் எல்லைகளைத் தாண்டிய சாதனைகள், டிஸ்கஸ் மற்றும் குண்டு எறிதலில் காட்டிய பவர்புல் திறமை என ஒவ்வொரு போட்டியிலும் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இத் தொடரில் மொத்தம் 35 முன்னணிப் பள்ளிகளைச் சேர்ந்த 738 மாணவிகள் களமிறங்கியுள்ளனர். 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் கடுமையாக இருந்தன.

முதல் நாள் போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போட்டிகள் விறுவிறுப்பா நடக்க உள்ளது. மண்டல தடகளப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி பள்ளி கல்வித் துறையும், முத்தியால்பேட்டை சின்னாத்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து செய்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us