தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டேக்வாண்டோ பெல்ட் தேர்வு வீரர்கள் பங்கேற்பு

டேக்வாண்டோ பெல்ட் தேர்வு வீரர்கள் பங்கேற்பு

டேக்வாண்டோ பெல்ட் தேர்வு வீரர்கள் பங்கேற்பு


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கலர் பெல்ட் தேர்வில் வீரர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கலர் பெல்ட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வழுதாவூர் சாலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேக்வாண்டோ கிளையில் நடந்த வீரர்கள் தேர்வை சங்கத் தலைவரும் அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.

இந்த தேர்வில் காமராஜர் தேக்வாண்டோ அகாடமி, முதலியார்பேட்டை தேக்வாண்டோ கிளை மற்றும் புதுச்சேரி தேக்வாண்டோ கிளையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கலந்து கொண்டனர்.

தேர்வாளர் பாண்டியராஜ் தேர்வை நடத்தினார். தேர்ச்சி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலர் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க செயலாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.

நடுவர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சங்க துணைத் தலைவர் சங்கர் ராஜ், கிளை செயலாளர்கள் ஆனந்த், பிரபாகரன், ராஜ்மோகன், பாண்டியராஜ், ஹோமசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். துணைத் தலைவர் அன்பு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us