தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதி செவிலியர் கல்லுாரி திறப்பு

பாரதி செவிலியர் கல்லுாரி திறப்பு

பாரதி செவிலியர் கல்லுாரி திறப்பு


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுாரில் பாரதி கல்வி குழுமம் சார்பில், பாரதி செவிலியர் கல்லுாரி திறப்பு விழா நடந்தது.

கல்லுாரி நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். இணை நிர்வாகி சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர்கள் ஹரிஷ்குமார், மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, புதிய செவிலியர் கல்லுாரியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, வளாகத்தில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார்.

பின், செவிலியர் கல்லுாரியின் முதலாம் ஆண்டு வகுப்பறை, கல்லுாரி ஆய்வகம் மற்றும் நுாலகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

விழாவில், மணவெளி தொகுதி எம்.எல்.ஏ., ராமு, புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ், ஐ.எம்.இ.டி.,மருத்துவமனை நிறுவனர் ரமேஷ், காரைக்கால் காங்., பிரமுகர் சந்திரமோகன் வாழ்த்தி பேசினர்.

ஊர் முக்கிய பிரமுகர்கள் கண்ணன், வீரராகவன், நாசர், ரத்தின சந்திரசேகரன், செல்வகுமார், சரவணன், சுயநிதி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், பாரதி செவிலியர் கல்லுாரி துணை முதல்வர், பேராசிரியர்கள், சுப்ரமணிய பாரதி பள்ளி, சோரப்பட்டு பாரதி ஆங்கில பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us