ஜூனியர் கோ – கோ போட்டி வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ஜூனியர் கோ – கோ போட்டி வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : நவ 04, 2026 09:20 PM
ADDED : நவ 04, 2026 09:18 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த 17வது ஜூனியர் கோ கோ., போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி கோ கோ சங்கம் சார்பில், 17வது ஜூனியர் கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் சிறுவர்கள் பிரிவில் 18 அணிகளும், சிறுமியர் பிரிவில் 11 அணிகளும் கலந்து கொண்டன.
சிறுமியர் பிரிவில் கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை விளையாட்டு கழகம் முதலிடம், என்.ஆர். விளையாட்டு கழகம் இரண்டாமிடம், சேலியமேடு காமராஜர் யூத் கிளப் அணி மூன்றாமிடம், ஜீ.என். சரவணன் விளையாட்டு கழகம் நான்காமிடத்தை பிடித்தனர்.
சிறுவர்கள் பிரிவில் மேல் திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம் முதலிடத்தையும், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தையும், காமராஜர் யூத் கிளப் அணியினர் மூன்றாமிடமும், கதிர்காமம் திலிப் பிரசன்னா விளையாட்டு கழகம் நான்காமிடத்தையும் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவில், உடற்கல்வி ஆசிரியர் துரை வரவேற்றார். செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் தனகோடி துணைத் தலைவர் மலையன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் அழகானந்தம், செந்தில், மோகன் தாஸ் ஆகியோர் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை பொருளாளர் ராமமோகன், துணை தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
