தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு ஆரம்ப பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு ஆரம்ப பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு ஆரம்ப பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 09:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எக்கோல் ஆங்கிலேஸ் அரசு ஆரம்பப் பள்ளியில், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார். மாணவர்களின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் இயற்கை பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் மொத்தம் 180-க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சியைப் பள்ளியின் பிற மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, மாணவர்களின் திறமையைப் பாராட்டினர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் டெனியோ செயின்ட் தாமஸ், விமலா, கீர்த்தி, ஆனந்தன், லோக பிரியா, செல்வி, ஜீன் மர்லின், ஜெய ஷர்மா, மதுமதி, சரஸ்வதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us