தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுங்கள்: தீயணைப்பு துறை வேண்டுகோள்

விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுங்கள்: தீயணைப்பு துறை வேண்டுகோள்

விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுங்கள்: தீயணைப்பு துறை வேண்டுகோள்


UPDATED : நவ 05, 2026 04:28 AM

ADDED : நவ 04, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 04:28 AM ADDED : நவ 04, 2026 10:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும் என புதுச்சேரி தீயணைப்பு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ள சூழ்நிலையில், பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக புதுச்சேரி தீயணைப்புத்துறையின் கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ கூறியதாவது:

1. தீபாவளி பண்டிகையில் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி உபயோகித்து அதனால் உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2. பட்டாசுகளை வீதியில் வைத்து கொளுத்துவது ஆபத்தானது.

3.நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பக்கவாட்டில் நின்று பட்டாசு கொளுத்த வேண்டும். கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்த பின்பு தண்ணீரில் போட்டுவிட வேண்டும்.

4.பட்டாசுகளை வீடுகளில் வைத்திருக்கும்போது தீப்பொறி மற்றும் விளக்கு ஆகியவற்றை அதனருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5.பட்டாசுகளின் அருகில் நின்று புகைபிடிப்பதை தவிர்க்கவேண்டும்.

6.வெடிக்காத புகைந்துபோன பட்டாசுகளை நீண்ட குச்சியால் மட்டுமே அப்புறப்படுத்தவேண்டும்.

7.குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

8.கண்ணாடி பாட்டில் தேங்காய் சிறட்டை தகரடப்பா இவற்றினுள் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது. அப்படி வெடித்து சிதறும் துகள்கள் நம்மையும் அறியாமல் உடலில் பட்டு ஆபத்தை ஏற்படுத்தும்.

9.சரவெடிகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

10.பட்டாசுகளை வாங்கிவந்து அடுப்பின் அருகிலோ அல்லது பூஜை அறை அருகிலோ வைப்பதை தவிர்க்கவும். பட்டாசுகளை வாங்கும்போது தரமான பட்டாசுதானா என்று உறுதிசெய்து வாங்கவும். தரமற்ற நாட்டு வெடிகளை வாங்குவதை தவிர்க்கவும்.

11.பட்டாசுகளை பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்ற இடங்களில் வெடிப்பதைத் தவிர்க்கவும். திறந்தவெளி இடங்களில் வெடிப்பது பாதுகாப்பானது.

12.பட்டாசுகளை வாங்கும்போது அதிக ஒலி மற்றும் அதிக புகை வராத பட்டாசுகள் தானா என்று கேட்டு வாங்கவும்.

13.இனிப்புகள் செய்யும்போது சிறுவர்களை அருகாமையில் அனுமதிப்பதைத் தவிர்க்கவும். இனிப்புகளை செய்யும்போது தற்செயலாக வாணலியில் தீ ஏற்பட்டால் அதை அதற்கு தகுந்த மூடியைக்கொண்டு மூடி அந்த தீயிணை அணைக்கவும்.

அதைத் தவிர்த்து அதில் தண்ணீரை ஊற்றி அணைக்க முற்படுவதைத் தவிர்க்கவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை:: 1 .பட்டாசுகளை ஒருத்தர் மேலே ஒருத்தர் துாக்கி எறிந்து விளையாடக்கூடாது.

2.பட்டாசு மீது தகர டப்பாக்களில் போட்டு மூடி வேடிக்கை பார்க்கக் கூடாது.

3.குடிசைப்பகுதி மருத்துவமனை மற்றும் பெட்ரோல் பங்க் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது

4.ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பின் அருகில் வைத்து உலர்த்த கூடாது

5 .வெடிக்காத வெடிகளை எல்லாம் கும்பலாக ஒரே இடத்தில் குவித்து வைத்து பற்ற வைக்க கூடாது.

தீக்காயம் ஏற்பட்டால்:: குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் குளிர்ந்த நீரை அந்த வெப்பம் குறையும் வரை ஊற்ற வேண்டும். அந்த இடத்தை மெல்லிய பருத்தியாலான துணியால் மூடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். அதைத்தவிர்த்து அந்த இடத்தில் இங்க் அல்லது மாவு போன்றவற்றை ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

அவசர உதவிக்கான தீயணைப்பு நிலைய எண்கள்: 1.புதுச்சேரி தீயணைப்பு நிலையம்-101 மற்றும் 2336238

2.கோரிமேடு தீயணைப்பு நிலையம்-2272913

3.வில்லியனூர் தீயணைப்பு நிலையம்-2668101

4.திருக்கனூர் தீயணைப்பு நிலையம்-2688101

5.மடுகரை தீயணைப்பு நிலையம்-2699101

6.பாகூர் தீயணைப்பு நிலையம்-2633101

7.காலாப்பட்டு தீயணைப்பு நிலையம்-2655873

8.திருபுவனை தீயணைப்பு நிலையம்-2641101

9.சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம்-2678101

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us