/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசிடென்சி மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி
/
பிரசிடென்சி மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி
பிரசிடென்சி மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி
பிரசிடென்சி மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி
ADDED : ஜூன் 19, 2025 04:57 AM
புதுச்சேரி, : மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, கல்வித்துறை இணைந்து மண்டல அளவிலான செஸ் போட்டியை நடத்தியது. பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில், 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் கவுதம், துணை முதல்வர் ஜோசப் ஜான்பால், செஸ் ஒருங்கிணைப்பு செயலாளர் நாராயணன், நடராஜன், பொறுப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.