ADDED : மார் 31, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் வலம்புரி யோக விநாயகர் கோவிலில் மண்டல அபி ேஷக நிறைவு விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் வெங்கடசுப்பா ரெட்டியார் நகரில் வலம்புரி யோக விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்கையம்மன் கோவில்கள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல அபிேஷகம் துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வந்தது.
48வது நாளான நேற்று மண்டல அபிேஷகம் பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், கலச பூஜை, திரவியாவதி ஹோமம் நடந்தது. காலை 8:30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.