/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
லட்சிய வீரன் லக்சயா சென்: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி
/
லட்சிய வீரன் லக்சயா சென்: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி
லட்சிய வீரன் லக்சயா சென்: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி
லட்சிய வீரன் லக்சயா சென்: ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி
ADDED : ஆக 03, 2024 12:11 AM

பாரிஸ்: பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.
பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சீனதைபேயின் சோ டியென் சென் மோதினர். முதல் செட்டை 19-21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய லக்சயா சென் 21-12 என தன்வசப்படுத்தினார்.
முடிவில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர், மூன்றாவது இந்தியரானார். இதற்கு முன் இந்திய வீராங்கனைகளான சிந்து (2016, 2020), செய்னா நேவல் (2012) மட்டும் காலிறுதியை கடந்தனர். இந்திய வீரர்களான காஷ்யப் (2012, லண்டன்), ஸ்ரீகாந்த் (2016, ரியோ) காலிறுதி வரை சென்றனர்.
தடகளம்: பருல் சவுத்தரி ஏமாற்றம்
பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் பருல் சவுத்தரி, அன்கிதா தயானி பங்கேற்றனர். இதில் பந்தய துாரத்தை 15 நிமிடம், 10.68 வினாடியில் கடந்து 14வது இடம் பிடித்த பருல் சவுத்தரி பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அன்கிதா (16 நிமிடம், 19.38 வினாடி) 20வது இடம் பிடித்து ஏமாற்றினார்.