/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஆசிய பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா
/
ஆசிய பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா
ADDED : பிப் 10, 2025 10:40 PM

கிங்டாவோ: ஆசிய பாட்மின்டனில் இந்திய அணி மீண்டும் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில், கலப்பு அணிகளுக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 4வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' சீனா, இந்தியா உள்ளிட்ட 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். பைனல், பிப். 16ல் நடக்கவுள்ளது.
இந்திய அணி 'டி' பிரிவில் மக்காவ் (பிப். 12), தென் கொரியா (பிப். 13) அணிகளுடன் பெற்றுள்ளது. இந்திய அணியில் லக்சயா சென், பிரனாய், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, சதிஷ் குமார், அஷ்வினி பொன்னப்பா, காயத்ரி கோபிசந்த், திரீசா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சீனியர் வீராங்கனை சிந்து காயத்தால் விலகியதால் ஒற்றையரில் மாளவிகா களமிறங்குவார்.
கடந்த 2023ல் துபாயில் நடந்த இத்தொடரில் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி வெண்கலம் வென்று வரலாறு படைத்தது. இம்முறை தங்கம் வெல்ல முயற்சிக்கலாம்.