/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பைனலில் ஸ்ரீயான்ஷி-தஸ்னிம் * மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...
/
பைனலில் ஸ்ரீயான்ஷி-தஸ்னிம் * மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...
பைனலில் ஸ்ரீயான்ஷி-தஸ்னிம் * மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...
பைனலில் ஸ்ரீயான்ஷி-தஸ்னிம் * மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...
ADDED : அக் 04, 2025 11:14 PM

அல் அய்ன்: அல் அய்ன் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஒற்றையர் பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீயான்ஷி, தஸ்னிம் மிர் முன்னேறினர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அல் அய்ன் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி ('நம்பர்-61'), இந்தோனேஷியாவின் சியரா மார்வெல்லா (148) மோதினர். முதல் செட்டை 21-11 என கைப்பற்றிய ஸ்ரீயான்ஷி, அடுத்த செட்டையும் 21-12 என எளிதாக கைப்பற்றினார். 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஸ்ரீயான்ஷி, 21-11, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தஸ்னிம் மிர் (59), துருக்கியின் நெஸ்லிஹானை (53) எதிர்கொண்டார். முதல் செட்டை 9-21 என இழந்தார் தஸ்னிம். அடுத்த செட்டை 21-17 என போராடி வென்றார். தொடர்ந்து 3வது செட்டை 21-10 என எளிதாக வசப்படுத்தினார். 51 நிமிடம் நீடித்த இப்போட்டியில் தஸ்னிம் 9-21, 21-17, 21-10 என வென்றார். இன்று நடக்கும் பைனலில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீயான்ஷி, தஸ்னிம் மோத உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, சிங்கப்பூரின் ஜுன்சுகே, கீட் வெஸ்லே ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-16 என வென்று பைனலுக்கு முன்னேறியது.