sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: ஆகர்ஷி சாம்பியன்

/

பாட்மின்டன்: ஆகர்ஷி சாம்பியன்

பாட்மின்டன்: ஆகர்ஷி சாம்பியன்

பாட்மின்டன்: ஆகர்ஷி சாம்பியன்


ADDED : பிப் 26, 2024 10:30 PM

Google News

ADDED : பிப் 26, 2024 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உகாண்டா சர்வதேச பாட்மின்டனில் இந்தியாவின் ஆகர்ஷி சாம்பியன் ஆனார்.

உகாண்டாவில் சர்வதேச சாலஞ்சர் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஸ்ருதி முண்டடா பைனலுக்கு முன்னேறினர். முதல் செட் இழுபறியாக அமைந்தது. இதை ஆகர்ஷி 25-23 என போராடி கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-18 என வசப்படுத்தினார். 48 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஆகர்ஷி 25-23, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரகு மாரிசுவாமி, பைனலுக்கு முன்னேறினார். இதில் வியட்நாம் வீரர் லீ டக் பாட்டை சந்தித்தார். முதல் செட்டில் போராட்டத்தை வெளிப்படுத்திய போதும் 18-21 என ரகு, கோட்டை விட்டார். அடுத்த செட்டையும் 14-21 என இழந்தார். முடிவில் ரகு, 18-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 21-14, 21-13 என அமெரிக்காவின் வின்சன், ஜோஷுவா ஜோடியை சாய்த்து, சாம்பியன் ஆனது.

கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி, 22-20, 18-21, 21-19 என ஆஸ்திரேலியாவின் குரோன்யா, கென்னெத் ஜோடியை வென்று, சாம்பியன் ஆனது.






      Dinamalar
      Follow us