sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து

/

பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து

பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து

பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து


ADDED : ஜன 05, 2026 11:17 PM

Google News

ADDED : ஜன 05, 2026 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் பெண்கள் ஒற்றையரில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற சிந்து, மாளவிகா, ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி பங்கேற்கின்றனர்.

சிந்துவை 30, பொறுத்தவரையில் கடந்த ஆண்டு மோசமான பார்ம், உடற்தகுதியின்மை காரணமாக தவித்தார். கடந்த 2025, அக்டோபருக்குப் பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. புத்தாண்டில் மீண்டு வருவார் என நம்பலாம். முதல் சுற்றில் சிந்து, சீன தைபேவின் சங் ஷுவோ யுனை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையரில் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கோப்பை வென்றார் லக்சயா சென் 24. புத்தாண்டிலும் இது தொடர வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மற்றபடி ஆண்கள் இரட்டையரில் இந்தியா சார்பில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி, ஹரிஹரன்-அர்ஜுன் ஜோடி களமிறங்குகின்றன. பெண்கள் இரட்டையரில் திரீஷா-காயத்ரி, ருதுபர்ணா-ஸ்வேதாபர்ணா, கவிபிரியா-சிம்ரன் என மூன்று ஜோடி பங்கேற்கின்றன.






      Dinamalar
      Follow us