/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் ஆயுஷ் * மலேசிய பாட்மின்டனில்...
/
இரண்டாவது சுற்றில் ஆயுஷ் * மலேசிய பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் ஆயுஷ் * மலேசிய பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் ஆயுஷ் * மலேசிய பாட்மின்டனில்...
ADDED : ஜன 06, 2026 11:03 PM

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் முதல் சுற்றில் ஆயுஷ், லக்சயா வெற்றி பெற்றனர்.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 20, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மலேசியாவின் ஜி ஜியா லீயை 27, எதிர்கொண்டார். முதல் செட்டை 21-12 என வசப்படுத்தினார் ஆயுஷ். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-17 கைப்பற்றினார். முடிவில் ஆயுஷ், 21-12, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் லக்சயா சென் 24, முதல் சுற்றில் சிங்கப்பூரின் ஜியா ஹெங்கை 25, சந்தித்தார். முதல் செட்டை 21-16 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 15-21 என இழந்தார். பின், மூன்றாவது செட்டை 21-14 என கைப்பற்றினார். முடிவில் லக்சயா 21-16, 15-21, 21-14 என வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மாளவிகா 24, உலகின் 'நம்பர்-7' வீராங்கனை, தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனானிடம் 30, 11-21, 11-21 என எளிதாக தோற்றார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி 10-21, 20-22 என ஜப்பானின் மிடோரிகவா, யமாஷிடா ஜோடியிடம் தோற்றது.

