/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: ஆயுஷ், உன்னதி ஏமாற்றம்
/
பாட்மின்டன்: ஆயுஷ், உன்னதி ஏமாற்றம்
ADDED : மே 10, 2025 10:22 PM

தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா தோல்வியடைந்தனர்.
சீனதைபேயில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனதைபேயின் டியன் சென் சோவ் மோதினர். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஆயுஷ் 18-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் டொமோகா மியாசாகி மோதினர். இதில் ஏமாற்றிய உன்னதி 19-21, 11-21 என தோல்வியடைந்தார். இதனையடுத்து இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.