உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 30, 2024 09:14 PM

அ நிறம் | அளவு
மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.
ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் ரினோவ், பிதா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் போராடிய இந்திய ஜோடி 17-21 என இழந்தது. அடுத்த செட்டை 12-21 என எளிதாக நழுவவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 17-21, 12-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடில மலேசியாவின் ராய் கிங், ஜுனைதி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 19-21, 23-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.
