/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: கிரண் ஜார்ஜ் வெற்றி
/
பாட்மின்டன்: கிரண் ஜார்ஜ் வெற்றி
ADDED : அக் 09, 2024 11:00 PM

வன்ட்டா: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வெற்றி பெற்றார்.
பின்லாந்தில், ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீனதைபேயின் டிசூ வெய் வாங் மோதினர். முதல் செட்டை 23-21 என போராடி கைப்பற்றிய கிரண், இரண்டாவது செட்டை 21-18 என வென்றார். மொத்தம் 53 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கிரண் ஜார்ஜ் 23-21, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கே மோத இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் டென்மார்க் வீரர் விலகியதால் லக்சயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.