/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: தான்வி அபாரம்
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: தான்வி அபாரம்
ADDED : டிச 03, 2025 11:00 PM

கவுகாத்தி: மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் தருண், தான்வி சர்மா வெற்றி பெற்றனர்.
அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா 16, இந்தோனேஷியாவின் தலிலா புதேரி மோதினர். இதில் தான்வி சர்மா 6-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் அன்மோல் கார்ப், தஸ்னிம் மிர், அஷ்மிதா, அனுபமா, இஷாராணி, தன்யா ஹேம்னாத் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தருண், இந்தோனேஷியாவின் ரிச்சி டுடா ரிச்சார்டோ மோதினர். இதில் தருண் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி காயத்தால் விலகியதால், சகவீரர் மிதுன் மஞ்சுநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் துஷார் சுவீர் 21-14, 21-19 என சகவீரர் ரகு மாரிசாமியை வீழ்த்தினார்.

