/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
/
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
ADDED : டிச 04, 2025 10:40 PM

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, துஷார் சுவீர் உள்ளிட்டோர் முன்னேறினர்.
அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, தாய்லாந்தின் பாசா பன்னாசெட் மோதினர். இதில் தான்வி 21-17, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் தஸ்னிம் மிர் 9-21, 21-13, 21-13 என அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் அஷ்மிதா 16-21, 21-17, 21-16 என சகவீராங்கனை அன்மோல் கார்ப்பை தோற்கடித்தார். இந்தியாவின் அனுபமா 21-15, 21-15 என, இந்தோனேஷியாவின் சியரா மார்வெல்லாவை வென்றார். இந்தியாவின் இஷாராணி 21-13, 10-21, 21-12 என சகவீராங்கனை ஷ்ரேயாவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 16-21, 21-16, 21-19 என, சகவீரர் பிரனாய் ஷெட்டிகரை வென்றார். மற்றொரு போட்டியில் துஷார் சுவீர் 21-17, 18-21, 21-15 என இந்தோனேஷியாவின் பிஸ்மோ ராயாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தருண் 21-13, 21-16 என, சகவீரர் மெய்ரபா லுவாங் மைஸ்னமை தோற்கடித்தார்.

