/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா
/
பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா
ADDED : நவ 21, 2025 10:47 PM

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு லக்சயா சென் முன்னேறினர்.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் ஆயுஷ் ஷெட்டி பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட் 19-19, 21-21 என இழுபறியாக இருந்தது. பின் சுதாரித்த லக்சயா 23-21 என வென்றார்.
தொடர்ந்து அசத்திய இவர், இரண்டாவது செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் லக்சயா 23-21, 21-11 என நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் பிக்ரி, அல்பியான் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 19-21, 15-21 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.

