/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: வெல்வாரா லக்சயா
/
பாட்மின்டன்: வெல்வாரா லக்சயா
ADDED : மார் 18, 2024 10:59 PM

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டனில் சிந்து, லக்சயா தங்கம் வெல்ல காத்திருக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். சமீபத்திய மலேசிய ஓபன், இந்தியா தொடர் முதல் சுற்றில் தோற்றார் இளம் வீரர் லக்சயா 22. இதன் பின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆல் இங்கிலாந்து தொடர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இது தொடரும் பட்சத்தில் 'சுவிஸ்' தொடரில் சாதிக்கலாம். தவிர ஸ்ரீகாந்த் மீதும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பெண்கள் ஒற்றையரில் காயத்தில் இருந்து மீண்ட சிந்து, தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். ஆல் இங்கிலாந்து தொடரில் நிறைய தவறுகள் செய்த இவர், இம்முறை மீண்டு வர வேண்டும். முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோன்னேவை சந்திக்கவுள்ளார்.
ஆண்கள் இரட்டையரில் உலகின் 'நம்பர்-1' ஜோடி சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையரில் பிரனாய் இத்தொடரில் இருந்து விலகினர்.
பெண்கள் இரட்டையரில் திரீஷா, காயத்ரி ஜோடி, அஷ்வினி, தனிஷா ஜோடி மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளன.

