/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன் மிதுன் மஞ்சுநாத் வெற்றி
/
பாட்மின்டன் மிதுன் மஞ்சுநாத் வெற்றி
ADDED : டிச 21, 2024 10:25 PM

பெங்களூரு: தேசிய பாட்மின்டன் 2வது சுற்றில் மிதுன் மஞ்சுநாத், சவுரவ் வர்மா வெற்றி பெற்றனர்.
பெங்களூருவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் மிதுன் மஞ்சுநாத், பரத் ராகவ் மோதினர். அபாரமாக ஆடிய மிதுன் 21-9, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் சவுரவ் வர்மா 21-17, 21-17 என, அபினவ் கார்க்கை தோற்கடித்தார். 'நடப்பு சாம்பியன்' சிராக் சென் 21-15, 21-15 என ஜீத் படேலை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' அன்மோல் கார்ப், தீபாலி குப்தா மோதினர். இதில் அன்மோல் கார்ப் 21-8, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த முறை பைனல் வரை சென்ற தன்வி சர்மா 21-8, 21-6 என புளோராவை தோற்கடித்தார்.